sairaa suffered by sexual abuse in flight

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன பயன்..?என்ற கேள்வியில் உள்ளது பதில்.....மனித நேயம் எங்கோ சென்று விட்டது என்று கூறும் அளவிற்கு தான் இன்றைய நிலைமை உள்ளது...

இதனை பிரதிபலிக்கும் விதமாக,விமானத்தில் கூட பிரபல நட்சத்திர நடிகைக்கு பாலியல் சீண்டல் நடைபெற்று உள்ளது.

சில மாதங்களுக்கு முன்,உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு,பெண்கள் சாதிக்க முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டு,வெளிவந்த படம் தான் அமீர்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தங்கல்’. இதில் மகள் கதாபாத்திரத்தில் சைரா வாசிம் நடித்திருந்தார்.17 வயதான் இவர் ஏர் விஸ்தாரா விமானத்தில் டெல்லியில் இருந்து மும்பைக்கு பயணித்துள்ளார்.விமான நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த போது,ஒரு நபர் சைராவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார்

இந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க பேசி இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோ காட்சி அனைவரையும் கொதிப்படைய செய்துள்ளது.

இதில்,என்ன ஒரு கொடுமை என்றால்,சைராவிற்கு ஹெல்ப் செய்ய யாரும் முன்வராமல் இருந்துள்ளனர்...

மனதளவில் பாதிப்படைந்த சைரா,துக்கம் தாங்காமல் அழுதுக்கொண்டே தனக்கு யாரும் உதவி செய்ய விமானத்தில் முன்வரவில்லை என தெரிவித்துள்ளார்...மேலும் இப்படி தான் இந்த நாடு சிறுமிகளை இப்படித்தான் பாதுகாக்கிறதா என்ற கேள்வியை முன்வைகின்றனர்

இதனை தொடர்ந்து சைராவிற்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு பெருகி வருகிறது.குற்றவாளியை தண்டிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது