நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அதற்கு ஏற்ற போல், தான் தேர்வு செய்யும் கதைகளிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் இவர் தெலுங்கு நடிகர், ராணா டகுபதியக்கு ஜோடியாக,  நடித்து வரும் திரைப்படம் 'விரத பர்வம்'. இந்த படத்தை வேணு உதுகுலா என்பவர் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சாய் பல்லவி மிகவும் துணிச்சலான நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நக்சலைட்டின் தலைவராக ராணா டகுபதி நடித்து வருகிறார். இவர்கள் இடையே ஏற்படும் காதலால், இவர்கள் என்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது, இதனால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தில், பருத்திவீரன் ப்ரியாமணி... மற்றும் நந்திதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து முக்கிய காட்சி ஒன்று வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த காட்சியில்... நடிகை சாய் பல்லவி பேருந்து நிலையத்தில் மிகவும் கலப்பாக அமர்ந்திருப்பது போலவும், மக்கள் தன்னை அடையாளம் கண்டவுடன் ஓடி ஒளியும் காட்சியும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.