கடந்த மூன்று நாட்களாக திரையுலகில் வைரலாக பரவி வரும் செய்திகளில் ஒன்று நடிகை சாய் பல்லவியை, இயக்குனர் ஏ.எல்.விஜய் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வந்த தகவல் தான்.

அதாவது நடிகை சாய் பல்லவி, தமிழில் அறிமுகமான 'கரு' படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி இருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாகவும். இருவருக்கும் மனம் ஒற்று போனதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் வைரலாக பேசப்பட்டது.

மேலும் இது குறித்து இருவருடைய தரப்பும் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் அமைதியாகவே இருந்ததால், இது வதந்தியா அல்லது உண்மையா என பல ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்று, இயக்குனர் ஏ.எல்.விஜயை தொடர்பு கொண்டு, இந்த திருமண செய்தி குறித்து கேட்டபோது. பதறியபடி அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இது முற்றிலும் வதந்தியே, என அதிரடியாக கூறி இந்த திருமண செய்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.

ஆனால் தொடர்ந்து விஜய், இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, ஏ.எல்.விஜயின் பெற்றோர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அவரை வற்புறுத்தி வருவதாகவும், ஆனால் இதற்கு விஜய் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என விடாப்பிடியாக இருப்பதாகவும் அவருடைய நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.