saifalikhan and kareena kapoor love
திருமணம்
கரீனா கபூர் கடந்த 2012 ம் ஆண்டு தன்னை விட 11 வயது மூத்த நடிகர் சைஃப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 1 வயதில் தைமூர் அலிகான் என்ற ஆண் குழந்தை உள்ளான்.பாலிவுட்டின் கியூட் குழந்தை என்றால் அது தைமூர் தான்.கொழு கொழு தைமூரை கண்டாலே தூக்கி கொஞ்ச் தோன்றும் .
அழுகை
சைஃப் அலிகான் வீட்டை விட்டு கிளம்பினாலே கரீனா கபூர் அழுவாராம். சைஃப் ஷூட்டிங்காக வெளியில் சென்றால் அவரை பிரிந்திருக்க வேண்டும் என்று அழ ஆரம்பித்து விடுவாராம். இதை கரீனாவே தெரிவித்துள்ளார்.
தைமூர்
எனக்கு என் குழந்தை தைமூர் என்றால் உயிர்.அவன் மற்ற குழந்தைகளை போல் சாதாரணமாக வளர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் கரீனா
சிரிப்பு
கரீனா படப்பிடிப்புக்காக வெளியே சென்றால் தைமூரை அப்பா சைஃப் தான் பார்த்து கொள்கிறார்.கரீனா இல்லாவிட்டால் தைமூர் சோகமாக இருப்பான்.அம்மாவை பார்த்தால் போதும் சிரிக்க ஆரம்பித்து விடுவான் என்கிறார் சைஃப்
அழகு
கரீனா படங்களில் எவ்வளவு பிசியாக நடித்து கொண்டிருந்தாலும் வீட்டை கவனிப்பதில் குறை வைக்க மாட்டார்.அவர் தைமூரை தூக்கி வைத்திருக்கும் அழகே தனிதான் என்கிறார் அவரது காதல் கணவர் சைஃப் அலிகான்.
