sai prashanth death isuue

நடிகர் சாய் பிரஷாந்த்... இவரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. சின்னத்திரை சீரியல், திரைப்படம், டிவி நிகழ்ச்சி மிமிக்கிரி என மிகவும் துறுதுறுவென இருந்த நடிகர்.

இவருடைய முதல் திருமணம் தோல்வியடைந்ததால், தன்னுடைய தோழியை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள்ளும் ஒரு சில பிரச்சனைகள் தலை தூக்கின. இதனால் இவருடைய இரண்டாவது மனைவி சுஜாதாவும் இவருடன் சண்டை போட்டுக்கொண்டு இவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார் சாய் பிரஷாந்த்.

தற்கொலைக்கு முன் அவருடைய இரண்டாவது மனைவிக்கு இவர் ஒரு கடிதமும் எழுதி வைத்திருந்தார். அதில், என்னுடைய மரணத்திற்கு நீ காரணம் இல்லை, உன்னுடைய எதிர்காலத்திற்காக நீ சீர்வரிசையாகக் கொண்டு வந்த நகை மற்றும் கொஞ்சம் பணம் சேமித்து வைத்துள்ளேன் அதை நீ எடுத்துக்கொள். உன்னை என் வீட்டைச் சேர்த்த யாரும் திட்ட மாட்டார்கள் எனக் கூறி, அவருடைய முதல் மனைவியின் மகளை மிஸ் செய்வதாகவும் எழுதி இருந்தார். பின் தனக்கு நடிக்க வாய்ப்புக் கொடுத்த நடிகை ராதிகாவை அம்மா எனக் கூறி உருக்கமாக நன்றி தெரிவித்திருந்தார்.

இவர் இறந்து ஒரு வருடம் ஆன நிலையில், தற்போது, இவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு இவர் மனம் விரக்தியடையும் நிலைக்கு இழுத்துச் சென்றவர் யார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

அது இவருடைய இரண்டாவது மனைவி சுஜாதாவின் தந்தை தான் எனக் கூறப்படுகிறது. அவர் தான் இவர்கள் இருவருக்குள்ளும் சில பிரச்னைகளை மூட்டிவிட்டு, சண்டை வரக் காரணமாக இருந்தாராம். அதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே சாய் பிரஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.