Sai Pallavi Virata Parvam Update: சாய் பல்லவியின் பிறந்த நாளான இன்று தற்போது ' விராட பருவம்’ படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பாடல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாய் பல்லவியின் பிறந்த நாளான இன்று தற்போது ' விராட பருவம்’ படத்தின் ரீலிஸ் தேதி மற்றும் பாடல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரேமம் ஹீரோயின்:

மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமான நடிகை சாய் பல்லவிக்கு, முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. நடிப்பு,நடனம் என அனைத்திலும் அடிச்சு தூள் கிளப்பி குறுகிய கால கட்டத்திலேயே தமிழ், தெலுங்கு , கன்னடம், மலையாளம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். 

இதனால், அம்மணிக்கு மவுசு கூடி போக அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதன்பின் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தியா படத்தின் மூலம் தமிழிலும் கால்பதித்தார்.

தமிழில் முன்னணி ஹீரோக்களுடன்:

இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான NGK, தனுஷ் நடிப்பில் மாரி 2 என்று தமிழிலும் பெரிய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து அசத்தினார். மாரி 2 படத்தில் இடம்பெற்ற Rowdy Baby பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இவருக்கு நல்ல பெயர் வாங்கி தந்தது. சாய் பல்லவியின் நடிப்பை தாண்டி அவரது நடனத்திற்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.

தெலுங்கு திரையுலகில் சூப்பர் யோகம்:

இருப்பினும், சாய் பல்லவிக்கு கோலிவுட்டில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். பின்னர் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. 

சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்திலேயே உச்ச நடிகைகளை பின்னுக்கு தள்ளி டாப் நடிகையாக உயர்ந்தவர் சாய் பல்லவி. இவரது, நடிப்பில் சமீபத்தில் ஷ்யாம் சிங்காராய் படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. இவர் நடிப்பில் அடுத்ததாக சில லவ் ஸ்டோரி, விராட படம் வெளியாக உள்ளன.

விராட படம் ரிலீஸ் தேதி:

இதையடுத்து, தற்போது நடிகை சாய் பல்லவி நடிப்பில் விராட படம் ரிலீசாக தயாராக உள்ளது. ராணா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் நடிகை சாய் பல்லவி பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் விராட பருவம் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

சாய் பல்லவி பிறந்த நாள்:

 இந்நிலையில், சாய் பல்லவியின் பிறந்த நாளான இன்று தற்போது விராட பருவம் படத்தின் ரீலிஸ் தேதி மற்றும் விராட படத்தின் பாடல் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

விராட படம் பாடல் வீடியோ:

மேலும் படிக்க...Alya: ஆல்யா மானசாவிற்கு 2-வது குழந்தை பிறந்தது... மீண்டும் அப்பாவான குஷியில் சஞ்சீவ் - குவியும் வாழ்த்துக்கள்

அதன்படி, விராட படம் வரும் ஜூலை 1 ஆம் தேதி திரையரங்குகளில் விராட படம் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அதன் முன்னோட்டமாக படக்குழு இன்று, ''Soul of Vennela'' என்ற பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.