பிரேமம் படத்தில் மலர் டீச்சராக வந்த சாய் பல்லவி, மலையாள திரையுலக ரசிகர்களை மட்டும் இன்றி தமிழ் பட ரசிகர்களையும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் கவர்ந்தவர். 

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் இது வரை காதல், கத்தரிக்காய் என எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருப்பவர். ஆனால் தற்போது பல கிசுகிசுவில் சிக்கி தவித்து வருகிறார். 

குறிப்பாக இவர் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் மற்றும் ஹீரோக்களுக்கு ஏகப்பட்ட கண்டிஷன் போடுகிறாராம். மேலும் தலைக்கணமாக நடந்துக்கொல்வதாகவும் இவர் மீது பலர் குற்றம் சாட்டுகின்றனர். 

சமீபத்தில் 'கரு' படத்தின் நாயகன் நாக சவுரியா கூட சாய் பல்லவி மீது குற்றம் சாட்டி இருந்தார். 

எனினும் குறுகிய காலத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் வளந்து வரும் இவரின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக இப்படிப்பட்ட கிசுகிசுக்கள் வெளிவந்துக்கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது... இதனால் இப்படிப்பட்ட தகவல்கள் உண்மையா? இல்லையா? என ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளது.