சாய் பல்லவியுடன் சர்ப்ரைஸ் கூட்டணி அமைத்த சூர்யா - ஜோதிகா... வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Gargi : சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் வெளியீட்டு உரிமையை 2டி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தை ரிச்சி பட இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கி உள்ளார்.
தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா, தனது மனைவியுடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி, அதன் மூலம் பல்வேறு தரமான படங்களை கொடுத்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த 36 வயதினிலே, கடைக்குட்டி சிங்கம், சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றன.
தற்போது சூர்யா 41, சூரரைப் போற்று இந்தி ரீமேக் என ஏராளமான படங்களை தயாரித்து வரும் 2டி நிறுவனம், சாய் பல்லவி நடித்துள்ள கார்கி படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது. இப்படத்தை ரிச்சி பட இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கி உள்ளார். நடிகை சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி உள்ளது.
நகைச்சுவை நடிகர் காளி வெங்கட் இப்படத்தில் சாய் பல்லவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கோவிந்த் வசந்த இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றி உள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளது.
இப்படம் குறித்து சூர்யா கூறியுள்ளதாவது: “நானும் ஜோதிகாவும், கார்கி படத்தில் இணைந்தது மகிழ்ச்சி. இந்த படத்தில் உள்ள சில கதாபாத்திரங்கள் நம் மனதில் நிற்கும். புதிய சிந்தனைகள் மற்றும் எழுத்துக்கள் கொண்டாடப்பட வேண்டும். உங்கள் அனைவருக்கு கார்கி பிடிக்கும் என நம்புகிறோம்” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... Ajith : ரூ.5 கோடி மதிப்புள்ள ஆடம்பர காரில் அஜித் கொடுத்த கெத்து போஸ்... வைரலாகும் ஏகே-வின் லண்டன் கிளிக்ஸ்