மன உளைச்சலுக்கு ஆளான சாய் பல்லவி...! அப்படி என்ன நடந்தது...!

பிரேமம் படம் மூலம் மலையாள திரை உலகில் புகழின் உச்சிக்கு சென்ற சாய் பல்லவிக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது...

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமான சாய்  பல்லவி தற்போது தெலுங்கு கன்னடம்  மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில்,அவர் மீதான பல குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.அதன்படி,படப்பிடிப்பின் போது அவர்  ஹீரோவை  மதிக்காமல் நடந்துக்கொள்வதாகவும்,படபிடிப்பில் திமிராக நடந்துக் கொள்வதாகவும் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்

இதன் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறப் படுகிறது.

அதே வேளையில் மிக விரைவில் நல்ல வளர்ச்சியை எட்டி பிடித்துள்ள சாய் பல்லவி  மீதான பொறாமையால் சிலர் இது போன்று சொல்லி வருவதாக கூட பேசப்பட்டு வருகிறது...

எது எப்படியோ,சாய் பல்லவி அவருடைய ரசிகர்களுக்கு தேவையான நல்ல  கதையையும்,கருத்தையும் சொல்லும் விதமாக படங்களை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவர். இதில் ஹீரோவை எந்த விதத்தில் மதிக்கவில்லை என்பது புரியவில்லை என பலரும் கேள்வி கேட்பது போல, சில கிசு கிசு பேச தொடங்கி உள்ளனர்

இந்நிலையில்,ஆந்திர கல்வி அமைச்சர் மகனை காதலிப்பதாக வெளியான   வதந்தியும் அவரை சோகமடைய செய்துள்ளது.