பல முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் தலை சிறந்த இயக்குனர்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருக்கும். அப்படி பட்ட வாய்ப்பு கிடைக்கும் போது, சிறு கதாப்பாத்திரமாக இருந்தாலும், அதனை பயன்படுத்தி கொண்டு தங்களுடைய கனவை நிறைவேற்றி கொள்கிறார்கள்.

அந்த வகையில், பாகுபலி என்கிற படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து, உலக சினிமாவையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமௌலி. இவரின் இயக்கத்தில் தற்போது 'RRR ' திரைப்படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இரண்டு சுதந்திர விடுதலை போராட்ட வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோர் கதாநாயகனாக நடித்து வருகின்றனர். 

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக டெய்சி எட்கர் ஜோன்ஸ் என்ற நடிகை நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அவர் இந்த படத்தில் இருந்துவிலகிவிட்டதால் அவருக்கு பதில் வேறு சில நடிகைகளை படகுஸுவினர் பரிசீலனை செய்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடிகை சாய்பல்லவியை நடிக்க வைக்க படக்குழுவினர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், சமந்தா, அனுஷ்கா, தமன்னா என பல நடிகைகள் நடித்துள்ள போதிலும் இதுவரை நயன்தாரா நடிக்க வில்லை எனவே, நயன்தாராவிற்கு கூட கிடைத்திராத அதிர்ஷ்ட வாய்ப்பு, சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது.