sai pallavi acting mother character

பிரேமம் என்கிற மலையாளப் படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சாய் பல்லவி. தற்போது இவர், தேவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கும் 'கரு' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சாய் பல்லவி நான்கு வயது குழந்தைக்கு அம்மாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய முன்னணி நாயகிகள் ஏற்க மறுக்கும் அம்மா வேடத்தை சாய் பல்லவி மிகவும் துணிச்சலாகத் தேர்தெடுத்து நடிக்கிறார். 

மேலும் 'கரு' படம் கருக்கலைப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை என்றும் அதனால் தான் இந்தப் படத்திற்கு 'கரு' என்பதையே தலைப்பாக வைத்துள்ளார் ஏ.எல்.விஜய்.