Pranitha Subhash : சகுனி, மாஸ் பட ஹீரோயின் பிரணீதாவுக்கு குழந்தை பிறந்தது

Pranitha Subhash : குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகை பிரணீதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Saguni and mass movie actress Pranitha Subhash blessed with a baby girl

அருள்நிதி நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான உதயன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரணீதா. இதன்பின்னர் கார்த்திக்கு ஜோடியாக சகுனி படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக மாஸ் படத்திலும் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். முன்னணி நடிகர்களுடன் நடித்த பின்னரும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் பிற மொழி படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் பிரணீதா.

தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்த இவர், கடந்தாண்டு மே மாதம் தனது நீண்ட நாள் காதலரான பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர் நிதின் ராஜுவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவரின் பிறந்தநாளன்று தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிவித்தார்.

கடந்த மாதம் இவருக்கு வளைகாப்பு நடந்தது. அதன்புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகை பிரணீதாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் ஏந்தியபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள நடிகை பிரணீதாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்...  Myna : கஷ்டப்பட்டு நடிச்ச சீனெல்லாம் கத்திரி போட்டு தூக்கிட்டாங்க... லோகேஷ் கனகராஜ் மீது அதிருப்தியில் மைனா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios