sagithya agadamy awards announced

எழுத்தாளர்கள் அனைவருடைய லட்சியமாக இருப்பது சாகித்ய அகாதமி விருது எனலாம். அப்படி மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த விருதை இந்த ஆண்டு பெறப்போகும் கவிஞர்கள் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் மக்கள் கவிஞர் என அனைவராலும் அழைக்கப்பட்ட கவிஞர் இன்குலாப். இவர் ராமநாதபுரத்தில் பிறந்து சென்னையில் உள்ள புதுக்கல்லூரியில் 35 வருடம் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார். மேலும் தமிழ் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் என பல்வேறு திறமைகளை உடையவராக இருந்தவர். 

இவர் 'காந்தள் நாட்கள்' என்கிற சிறுகதை தொகுப்பு எழுதியதற்காக இவருக்கு இந்த வருடத்திற்கான சாகித்ய அகதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் போல் கவிஞர் யூமா வாசுகிக்கு 'கதாக்கின் இதிகாசம்' என்ற மலையாள நூலை மொழி பெயர்ப்பு செய்ததற்காக சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ள இன்குலாப் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைதார். அவர் இறந்து ஒருவருடத்திற்கு பின் இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.