பிரபல நடிகரும் மரம் நடும் ஆர்வலருமான திரு.விவேக் அவர்களின் மறைவிற்கு ஈஷாஅறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரபல நடிகரும் மரம் நடும் ஆர்வலருமான திரு.விவேக் அவர்களின் மறைவிற்கு ஈஷாஅறக்கட்டளை நிறுவனர் சத்குரு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விவேக் - தனது கலையில் ஜாம்பவானாகத் திகழ்ந்து, கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்தவர். தமிழ்நாட்டின் மாபெரும் மரங்கள் நடும் திட்டத்தை துவக்கியதற்கும் என்றும் நம் நினைவில் நிற்பார் - அவர் இதயம் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் துடித்தது. என் ஆழ்ந்த இரங்கல்கள் & குடும்பத்தினருக்கு ஆசிகள்” என்று தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

மேலும், ஈஷா அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “நடிகர் #விவேக் - ஒரு மகத்தான நடிகர், மக்கள் நலனுக்கு உழைத்தவர், மரங்கள் நடும் சமூக ஆர்வலர், அற்புதமான மனிதர் - அவர் மரணம் மிகுந்த வருத்தமளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to load tweet…

நடிகர் விவேக் அவர்கள் ஈஷா பசுமை கரங்கள் திட்டத்திற்கு ஆரம்ப காலம் முதல் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தார். மேலும், காவேரி கூக்குரல் இயக்கத்திற்கும் தனது பேராதரவை வழங்கினார். அவர் ஈஷாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு மக்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.