Sara Tendulkar : கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, விரைவில் பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின். ரசிகர்களால் செல்லமாக மாஸ்டர் பிளாஸ்டர் என அழைக்கப்படும் சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபோதும் ஐபிஎல் தொடரில் ஒரு அங்கமாக உள்ளார். அவர் தற்போது ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆலோசகராக உள்ளார்.
சச்சினுக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளார். இதில் அர்ஜுன் தனது தந்தையை போலவே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்டிருந்ததால், அவரை கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டராக மெருகேற்றி வருகிறார் சச்சின். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ளார். ஆனால் அவர் இதுவரை ஒரு போட்டியில் கூட களமிறக்கப்பட வில்லை.

மறுபுறம் சச்சினின் மகள் சாரா, லண்டனின் மருத்துவ படிப்பை முடித்துள்ள இவருக்கு தற்போது 24 வயது ஆகிறது. இவர் அண்மையில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் உடன் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இந்நிலையில், சாரா டெண்டுல்கர் விரைவில் பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவம் படித்தாலும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்ததால் அவரின் விருப்பத்திற்கு ஏற்றபடியே செயல்பட சச்சினும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் நடிப்பு பயிற்சியெல்லாம் மேற்கொண்டுள்ளாராம். இதுதவிர ரசிகர்களை கவரும் விதமாக இன்ஸ்டாகிராமில் விதவிதமாக போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார் சாரா.
இதையும் படியுங்கள்... Kangana Ranaut : சிறுவயதிலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் - பகீர் கிளப்பிய கங்கனா ரனாவத்...!
