நடிகர் விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில், சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமாகி, வித்தியாசனான கதைக்களங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. மேலும் கதாநாயகனாக மட்டும் , வில்லன், குணச்சித்திரம் போன்ற வேடங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். 

தற்போதைய படங்கள்:

விஜய் சேதுபதி, தற்போது கடைசி விவசாயி, சங்கத் தமிழன், லாபம், சைரா நரசிம்ம ரெட்டி, மாமனிதன், என தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் அரை டஜனுக்கு குறைவில்லாமல்  அடுக்கடுக்காக பல படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இவர் நடித்த 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை படம்:

இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில், பிரபல இலங்கை கிரிக்கெட் வீரரும்,  சுழல்பந்து வீச்சாளருமான,  முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில், விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

விஜய் சேதுபதியுடன் இணைந்த சச்சின்:

விஜய் சேதுபதி நடிக்க உள்ள முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில்,  பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவருடைய கதாபாத்திரத்திலேயே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முத்தையா முரளிதரனும் சச்சினும் மைதானத்தையும் தாண்டி நெருக்கமான நண்பர்கள் என்றும், இவர்களது நட்பு மற்றும் களத்தில் ஏற்பட்ட போட்டிகள்,  குறித்த சில காட்சிகள் இப்படத்தில் இடம்பெற உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

படத்தின் நிலவரம்:

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகும் என்றும்,  இந்தப் படத்தை பிரபல நடிகர் ராணா டகுபதி மற்றும் சுரேஷ் ப்ரோடுக்ஷன்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளது.  தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.