ரியல் ஸ்டார் ஆக விளங்கும் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் சமீப காலமாக ரசிகர்களை பெருமளவு ரசிக்க வைத்துள்ளது.
அதன் அடிப்படையில் வெளிவந்த மேரி கோம், தங்கள், தோனி போன்ற படங்கள் 100 கோடி கும் மேல் வசூல் சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கையை மையப்படுத்தி, ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கத்தில் பரபரப்பாக எடுக்கப்பட்டு வந்த 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ் ' படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
மேலும் இந்த படத்தில் சச்சின் கதாபாத்திரத்தில் அவரே நடித்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தை மே 26ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.
இந்த தகவலை சச்சின் தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
