இந்திய கிரிக்கெட் அணியின் மிக பெரிய பலம் என்று சொல்லப்படும் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தோனி' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

அதிலும் முக்கியமாக கிரிக்கெட் பிரபலம் ஆகாத நாடுகளில் கூட தோனி படம் பெரும் வரவேற்பை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் கடந்த சில மாதங்களாக தயாராகி வருகிறது.

தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி 'சச்சின்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஜேம்ஸ் எர்ச்கின் இயக்கியுள்ளார். சச்சின் தெண்டுல்கரே அவரது கேரக்டரில் நடித்துள்ளதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

முதலில்ச தோனி படத்தின்ச்சி மூலம்ன் களமிறங்கிய தோனி அதிக வசூல் சாதனை படைப்பாரா அல்லது இப்போது களமிறங்க உள்ள சச்சின் அதிய வசூல் சாதனை படைப்பாரா ஏன பொறுத்துதான் பார்க்க வேண்டும்.