சென்னை மதுரவாயலில் தான் வசித்த அபார்ட்மெண்டில் மர்மமான முறையில் நிர்வாணநிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார் நடிகை சபர்ணா. மர்மமான முறையில் இறந்து கிடந்த சபர்ணா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

பொதுவாக தற்கொலை செய்து கொள்பவர்கள் நிர்வாணமாக தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை. ஆகவே அவரது மரணம் குறித்து போலீசார் சந்தேகம் எழுப்புகின்றனர். சேலத்தை சேர்ந்த சபர்ணா ஏற்கனவே திருமணம் ஆனவர்.

அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். கணவரை விட்டு பிரிந்து சின்னத்திரைக்கு வந்த சபர்ணா , பின்னர் திரைத்துறையிலும் நுழைந்தார். சினிமாவில் ஆண் நண்பர்கள் சபர்ணாவுக்கு அதிகம். ஆகவே அதன் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
