Asianet News TamilAsianet News Tamil

எஸ்.ஏ.சி.க்கு அதிர்ச்சி கொடுத்த விஸ்வாசி... கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா...!

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா விஜய்யின் தந்தைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

SA Chandrasekar Political party leader RK Raja Resigned
Author
Chennai, First Published Nov 18, 2020, 2:32 PM IST

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்  தொடங்கிய அரசியல் கட்சியின் தலைவர் பத்மநாபன் என்கிற  ஆர்.கே.ராஜா மீது திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரியஸ் எஸ்டேட் தொழில் செய்யும் ராஜா, 2014ம் ஆண்டு விற்ற  நிலத்திற்கு  பத்திரப்பதிவு செய்து தரவில்லை என்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ஆர்.கே.ராஜாவின் மனைவி, மைத்துனர், மாமனாரை அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். 

SA Chandrasekar Political party leader RK Raja Resigned

 

இதையும் படிங்க: “சூரரைப் போற்று” படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?... தியேட்டர் உரிமையாளர்களை திகைக்க வைத்த சாதனை...!

ஆர்.கே. ராஜா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் விஸ்வாசி அவர் அந்த கட்சியில் இணைந்ததால் கடுப்பான விஜய் தனது ஆதரவாளரான புஸ்ஸி ஆனந்த் என்பவர் மூலமாக புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த அழுத்தத்தால் தான் போலீசார் தன்னை தேடுவதாகவும், தன் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அவர் தான் பொறுப்பு என்றும் ஆர்.கே.ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டது பரபரப்பை கிளப்பியது.

SA Chandrasekar Political party leader RK Raja Resigned

 

இதையும் படிங்க: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில்... அஜித் மச்சினிச்சி ஷாமிலி கொண்டாடிய கலக்கல் தீபாவளி...!

இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆரம்பித்த அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக பத்மநாபன் என்கிற ஆர்.கே.ராஜா விஜய்யின் தந்தைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு முன்னதாக பொருளாளர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநில தலைவரும் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios