“சட்டம் ஒரு இருட்டறை”, “நீதிக்கு தண்டனை”, “செந்தூரப்பாண்டி” உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவ்ர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

கடைசியாக “டூரிங் டாக்கீஸ்” என்ற படத்தை இயக்கினார்.  அதுமட்டுமின்றி “கொடி” படத்தில் அரசியல்வாதி வேடத்தில் நடித்திருப்பார்.

இந்த நிலையில் புதிய படம் ஒன்றில் அவர் நடிக்க இருக்கிறார்.

ஆம், டிராஃபிக் ராமசாமி வாழ்க்கை வரலாற்று படத்தில் அவர் டிராஃபிக் ராமசாமி வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை கிரீன் சிக்னல் பட நிறுவனம் தயாரிக்க, எஸ்.ஏ.சி.யின் உதவி இயக்குனர் விஜய் விக்ரம் இயக்குகிறார். 

இது குறித்து இயக்குனர் விஜய் விக்ரம் கூறியது:

“இப்படம் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூக போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுப்பதால் பல திருப்புமுனை சம்பவங்களும், திருப்பங்களும் எதார்த்தமாவே அமைந்திருக்கிறது. மேலும் இப்படம் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று அவர் கூறினார்.