எப்படி நீங்க சட்ட சபைல மாறி மாறி பேசற மாதிரியா? உங்க விலை என்ன..? எஸ்.வி.சேகர் பகீர் பதிலடி..! 

கடந்த முறை தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், வெற்றி பெற்ற பாண்டவர் அணியை சேர்ந்தவர்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, 2019-2022 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய, வரும் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தல், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 23-ந்தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுறத்தில் உள்ள, டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியின் சார்பில், மீண்டும் தலைவர் பதவிக்கு நடிகர் நாசர் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட உள்ளனர். 

அதே போல் துணைத்தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தினேஷ், சோனியா போஸ், கோவை சரளா, உள்ளிட்ட பலர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாண்டவர் அணிக்கு எதிராக, இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணி களமிறங்கி உள்ளது. இந்த நிலையில் நடிகர் கருணாஸ் ஐசரி கணேஷ் பற்றி தெரிவித்த கருத்துக்கு எஸ்வி சேகர் பதிலடி கொடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். 

அதில், 

"ராதாரவியை பழி வாங்க வேண்டும் என்றுதான் ஐசரி கணேஷ் பாண்டவர் அணிக்கு வந்தார். பதவி ஆசையின் காரணமாக நடிகர் சங்கத்தை பிளவுபடுத்திவிட்டார். பணம் இருந்தால் யாரையும் வாங்கி விடலாம் - நடிகர் கருணாஸ் பதிவிட“எப்படி நீங்க சட்ட சபைல மாறி மாறி பேசற மாதிரியா? உங்க விலை என்ன..? என நக்கலாக கருணாஸுக்கு கேள்வி கேட்டு பதிவிட்டு உள்ளார் எஸ்.வி.சேகர்.