பாஜகவை கடுமையாக எதிர்த்து பேசி வந்த விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் திடீரென காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளது பரபரப்பாகியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் அனைத்தையும் எஸ்ஏசி எதிர்த்தே வந்துள்ளார். விஜயும் கூட மத்திய, மாநில அரசுகளை விமர்சிக்கும் வகையில் தனது படங்களில் காட்சிகளை வைத்து சிக்கலை எதிர்கொண்டார். இருந்தாலும் கூட பாஜக எதிர்ப்பு மனநிலையில் எஸ்ஏசி உறுதியாக இருந்து வந்தனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் பட விழா ஒன்றில் எஸ்ஏசி பேசினார். 

அப்போது இந்தியாவை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறி அதிர வைத்தார். அதாவது மோடி மீண்டும் பிரதமராகிவிட்டதால் சிறுபான்மையினருக்கு ஆபத்து என்கிற ரீதியில் அவர் பேசிச் சென்றார். எஸ்ஏசி ஒரு கிறிஸ்தவர். ஞாயிற்றுக்கிழமை தவறாமல் தேவாலயம் சென்றுவிடுவார். இதன் தாக்கமே அவரது பாஜக எதிர்ப்பு நிலைப்பாடாக இருந்து வந்தது. இந்த நிலையில் இந்தியாவை இனி யாராலும் காப்பாற்ற முடியாது என்று எஸ்ஏசி பேசியது உளவுத்துறை மூலமாக டெல்லி வரை சென்றுவிட்டதாக சொல்கிறார்கள். 

அதன் பிறகு ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை மூலமாக கிடைத்த சில விஷயங்கள் குறித்து விளக்கம் கேட்டு எஸ்ஏசிக்கு நோட்டீஸ் சென்றதாக சொல்கிறார்கள். இதன் பின்னணியில் தனது பேச்சு இருப்பதை எஸ்ஏசியும் உணர்ந்து கொண்டதாக பேசிக் கொள்கிறார்கள். தொடர்ந்து பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருந்தால் தனக்கு மட்டும் அல்ல தனது மகனின் படங்களுக்கும் பிரச்சனை என்கிற உண்மையையும் எஸ்ஏசி உணர்ந்துவிட்டதாக கூறுகிறார்கள்.

 

இதனால் மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை சில காலம் தவிர்க்க எஸ்ஏசி முடிவு செய்துள்ளார். மேலும் மத்திய அரசின் கோபத்தை சரி செய்ய நியுஸ் 18 தொலைக்காட்சிக்கு வழிந்து சென்று பேட்டி கொடுத்துள்ளார் எஸ்.ஏசி அப்போது தான் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளை ஆதரித்து எஸ்ஏசி பேசியுள்ளார்.