RRR: தமிழ்நாட்டில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த வசூலை முறியடித்து...! மாஸ் காட்டிய RRR படம்..
RRR VS ET Movie: ராஜமௌலியின் இயக்கத்தில், கடந்த மார்ச் 25ம் தேதி பிரமாண்டமாக வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் வெற்றியை தெலுங்கு திரையுலகமே கொண்டாடி வருகிறது.
ராஜமௌலியின் இயக்கத்தில், கடந்த மார்ச் 25ம் தேதி பிரமாண்டமாக வெளியான 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தின் வெற்றியை தெலுங்கு திரையுலகமே கொண்டாடி வருகிறது.
இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவருடைய திரைப்படங்களில் பிரம்மாண்டத்திற்கு கொஞ்சமும், பஞ்சம் இருக்காது. இவர் இயக்கத்தில் உருவான பாகுபலி, பாகுபலி2. மாவீரன் உள்ளிட்ட திரைப்படங்கள் அதிக அளவிலான பிரமாண்டம், கிராஃபிக்ஸ் காட்சிகள் மக்களின் கவனம் ஈர்த்து வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.
இரு பெரும் தெலுங்கு நடிகர்கள்:
ராஜமௌலி, இயக்கத்தில் தெலுங்கில் இரு பெரும் நடிகர்களான ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, சந்தோஷம் அடைந்த ஜுனியர் என்.டி.ஆர் கூட தனது நன்றியை ஓர் அறிக்கையின் மூலம் வெளியிட்டிருந்தார்.
ஆலியா பட் அப்செட்?
இதில், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இருப்பினும், மறு புறம் ஆலியா பட் தனது கதாபாத்திரத்திற்கு 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படத்தில் முக்கியத்துவம் இல்லை என்ற கோபத்தில் ராஜமௌலியை சமூக வலைதளங்களில் அன்பாலோ செய்துவிட்டார். இந்த தகவல் இணையத்தில் பேசு பொருளாக மாறியது.
படத்தின் வசூல் விவரம்:
பிரமாண்டமாக ரூ. 500 கோடி மெகா பட்ஜெட்டில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர் படம், கொரோனா காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே மார்ச் 25 அன்று உலகம் முழுவதும் வெளியானது. ரிலீஸ் ஆன முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் சேர்த்து ரூ. 230 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இரண்டாவது நாள் முடிவில், ரூ.340 கோடியை தாண்டி வசூலை குவித்தது. இதையடுத்து, இதுவரை படம் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வருகிறது. இதன் மூலம், ஆர்.ஆர்.ஆர் படத்தின் மொத்த செலவை, படம் மூன்றே நாளில் வசூலித்து தந்தது.
எதற்கும் துணிந்தவன் படம் VS ஆர்.ஆர்.ஆர் படம்:
தெலுங்கு சினிமா நடிகர்களால் உருவாக்கப்படும், மாவீரம், பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்கள் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தற்போது, அந்த வரிசையில் ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ்நாட்டில் மட்டும், 40 கோடி வரை வசூலித்துள்ளதாம், வரும் நாட்களிலும் வசூல் அதிகமாகும் என்கின்றனர். இதன் மூலம், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த தமிழ்நாட்டு வசூலையும் முறியடித்து படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.