ஹாலிவுட் தரத்தில் RRR படத்தின் அடுத்த பாகம்.. ராஜமௌலியின் பிளான் என்ன? எழுத்தாளர் சொன்ன சீக்ரெட்!
குறிப்பாக 2009ம் ஆண்டு வெளியான ராம் சரணின் மகதீரா என்ற படம் இந்திய சினிமாவை இவர் பக்கம் திரும்பச்செய்தது.
தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் விஜேந்திர பிரசாத் அவர்களின் மகன் தான் எஸ்எஸ் ராஜமௌலி. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு, ஜூனியர் NTR நடிப்பில் வெளியான ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக களம் இறங்கினார். அன்று தொடங்கி இன்று வரை பல முன்னணி தெலுங்கு நடிகர்களை கொண்டு இவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக 2009ம் ஆண்டு வெளியான ராம் சரணின் மகதீரா என்ற படம் இந்திய சினிமாவை இவர் பக்கம் திரும்பச்செய்தது.
இந்நிலையில் கடந்த 2015 மற்றும் 2017ம் ஆண்டு இவருடைய இயக்கத்தில் வெளியான பாகுபலி படங்களின் இரு பாகங்களும் உலக புகழ் பெற்றது. அதன் பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து ராம்சரண் மற்றும் ஜூனியர் NTR நடிப்பில், மௌலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் மீண்டும் ஒருமுறை உலக அரங்கில் இந்திய சினிமாவை தலைநிமிரச் செய்தது.
கோலிவுட் உலகின் சூப்பர் ஹிட் ஹீரோஸ்.. ஆனால் அந்த இடத்தை கோட்டைவிட்ட வாரிசு நடிகர்கள்!
இந்த திரைப்பட பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்ததும் நாம் அறிந்ததே, இந்நிலையில் எழுத்தாளரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜேந்திர பிரசாத் அண்மையில் ஒரு பேட்டியில் பேசும்பொழுது, RRR படத்தின் அடுத்த பாகம் குறித்து பேசியுள்ளார்.
ஹாலிவுட் தரத்தில் இந்த திரைப்படத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், ராஜமௌலி அல்லது அவரது தலைமையில் வேறு யாராவது இந்த படத்தை விரைவில் இயங்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.
ராஜமௌலி தற்போது மகேஷ் பாபுவின் படத்திற்காக தயாராகி வருகின்றார், ராமாயணத்தை தழுவிய ஒரு கதையாக இது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஊரே மெச்சும் அளவுக்கு நிச்சயதார்த்தம்... தாலி கட்டும் முன் திருமணத்தை நிறுத்திய சினிமா பிரபலங்கள்