Asianet News TamilAsianet News Tamil

'RRR ' படத்தின் மாஸ் தகவலை வெளியிட்ட படக்குழு..! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த, அரசு அனுமதி கொடுத்துள்ளதால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரிலீஸ் தேதி குறித்து, படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.
 

rrr movie release date confirmed
Author
Chennai, First Published Jan 25, 2021, 5:38 PM IST

'பாகுபலி' படத்தை தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு,  இயக்குநர் ராஜமெளலி 'ஆர்ஆர்ஆர்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். உடன் அஜய் தேவ்கன், இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

rrr movie release date confirmed

350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி தாறுமாறு வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. 

rrr movie release date confirmed

தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடத்த, அரசு அனுமதி கொடுத்துள்ளதால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ரிலீஸ் தேதி குறித்து, படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

rrr movie release date confirmed

'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் இவ்வருடம் அக்டோபர் 13ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இந்த தகவல், என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios