'பாகுபலி' என்கிற படத்தை இயக்கி, உலக சினிமாவையே தென்னிந்திய திரையுலகின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ராஜமவுலி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர், தற்போது இயக்கி வரும் திரைப்படம் ஆர் ஆர் ஆர்
இந்த படத்தை டிடிவி தானய்யா தயாரிக்கிறார். ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா கதாநாயகனாக நடிக்கின்றனர். 

மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில். விறுவிறுப்பாக உருவாகி வரும், இந்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிப்புக்கு ரூ.1 கோடி வாரி வழங்கிய பிரபல முன்னணி நடிகர்!

ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ், உள்ளிட்ட  ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இப்படம், சுதந்திர போராட்ட வீரர்கள் அல்லூரி சீதாராம ராஜு, மற்றும் கோமராம் பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த போஸ்டரில் ராம் சரண் தேஜாவை நெருப்பாகவும், ஜூனியர் என்.டி.ஆர்ரை நீராகவும் காட்டியுள்ளார் ராஜமௌலி.  இப்படம் அடுத்த வருடம் ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.