இந்திய மக்களை ஆட்டி படைத்து வந்த கொரோனா இரண்டாவது அலை, சற்று கட்டுக்குள் வந்துள்ளதாலும், அடுத்தடுத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும் கிடப்பில் போடப்பட்ட படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் RRR படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதுகுறித்த சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு. 

இந்திய மக்களை ஆட்டி படைத்து வந்த கொரோனா இரண்டாவது அலை, சற்று கட்டுக்குள் வந்துள்ளதாலும், அடுத்தடுத்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதாலும் கிடப்பில் போடப்பட்ட படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் RRR படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதுகுறித்த சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு “RRR ” என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண், மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். சுமார் 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில், விறுவிறுப்பாக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில் தாறுமாறு வைரலானது. பின்னர் கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் துவங்கியது. பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்ட போதிலும் சில காட்சிகளே படமாக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து விரைவில் படக்குழு தகவல் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவரது எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியுள்ளனர்.

ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு, இரண்டு பாடல் காட்சிகளை தவிர அனைத்து பட காட்சிகளும் படமாக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே, விரைவில் 'RRR ' படத்தின் இந்த இரு பாடல் காட்சிகளும் படமாக்க பட்டு, ட்ரைலர் மற்றும் படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Scroll to load tweet…