பாலாஜி  மோகன் இயக்கத்தில் தனுஷ் – சாய் பல்லவி நடித்த மாரி 2 திரைப்படம் சமீபத்தில் வெளியானது. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் அதிக அளவு ஆதரவு கொடுத்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடலும் செம ஹிட் ஆனது.

தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்திற்கு பல வருடங்களுக்கு பின், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த ரவுடி பேபி பாடல்,  ஏற்கனவே. ஒரே வாரத்தில் விஜயின் மெர்சல் படத்தில் இடம் பெற்ற "ஆளப் போறான் தமிழன்" பாடல் சாதனையை முறியடித்தது.

இதைத்தொடர்ந்து,  மேலும் மேலும் சாதனைகளை படைத்தது வருகிறது. இந்த பாடல் யுடியூபில் வெளியான 55 நாட்களில், தமிழ்த் திரைப்படப் பாடல்களில் முதல் முறையாக 20 கோடி பார்வைகளை, 42 நாட்களில் கடந்து சாதனை புரிந்துள்ளது, அதே போல் 13 நாட்களில் 5 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. 

இதே ரீதியில் போனால் அடுத்த பத்து நாட்களில் 30 கோடி பார்வைகளை இந்தப் பாடல் கடந்து விடும் என்பது உறுதி. 

இந்திய அளவில் விரைவில் 250 மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாடல் என்கிற மாபெரும் சாதனையை 'ரவுடி பேபி' பெற்றுள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.