தென்னிந்திய பிரபல நடிகை ரோஜா, 90 களில் முன்னணி நடிகையாக இருந்த இவர், பத்து ஆண்டுகளில் 100 படங்களில் நடித்தவர் என்கிற பெருமைக்கு உரியவர்.

நடிகை என்பதையும் தாண்டி இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவாகவும் இருக்கிறார். இந்நிலையில் ரோஜா சமீபத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற நகரி தொகுதி மக்கள் குறைந்த விலையில் நல்ல உணவு பெரும் வகையில் 4 ரூபாய்க்கு உணவு கொடுக்கப்படும் உணவகம் ஒன்றை திறந்து வைத்துள்ளார்.

ஏற்கனவே தமிழ் நாட்டில் அம்மா உணவகம் செயல் பட்டு வரும் நிலையில், அதை விட குறைவாக உணவு வழங்கப்படுகிறதாம் ரோஜா தற்போது நகரி தொகுதியில் திறந்துள்ள உணவகத்தில். 

மேலும் ரோஜாவின் இந்த முயற்சியைப் பாராட்டிய ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, பிற தொகுதி எம்.எல்.ஏ-களையும் இது போன்ற ஒரு உணவகத்தை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறாராம்.

ஆந்திர பிரதேசத்தில் 2019-ம் ஆண்டுச் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரோஜாவின் இந்த மலிவு உணவகம் திட்டம் அண்ணா கேண்டீன் போட்டியாகவே ஓட்டுக்களைக் கவரவே என்று விமர்சிக்கப்பட்டு வந்தாலும், ரோஜாவின் இந்த முயற்சியைக்கும், பணம் சம்பாதிக்கும் நடிகைகள் மத்தியில் இவருடைய செயல் ஆச்சர்யம் அடைய செய்வதாகவும் சிலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.