தளபதி விஜய் நடிப்பில், வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்கள் கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் கால் பந்து கோச்சாக நடித்துள்ளார்.

விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் நயன்தாரா நடித்துள்ளார். மேலும், இந்துஜா, கதிர், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்துள்ளது.

தளபதி விஜயுடன் அட்லீ மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் நேற்றைய தினம் சரியாக 6 மணிக்கு வெளியிடப்பட்டது. ஒவ்வொரு சீனும் கண்சிமிட்டாமல் பார்க்கும் அளவுக்கு மிரட்டலாக இருந்தது. 

இந்நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலரை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கங்களில் ஒன்றான ரோஹினி சினிமாஸ் ரசிகர்களுக்காக பெரிய LED ஸ்கிரீன் மூலம் திரையிட ஏற்பாடு செய்து வந்தது. இதனால் விஜய் ரசிகர்களும் உற்சாகமாக இருந்தனர். 

ஆனால் கடைசி நேரத்தில், போலீஸ் பாதுகாப்பு கிடைக்காததால் 'பிகில்' படத்தின் ட்ரைலர் திரையிட முடியாமல் போனது. இதனால் ரோகிணி திரையரங்கம் முன்பு காத்திருந்த விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனால் ரோகினி திரையரங்கம் சார்பில் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு ட்விட் போடப்பட்டுள்ளது. முதலில் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் மனதில் ஒரு கோவம் இருந்தாலும், திரையரங்கம் மன்னிப்பு கேட்டுள்ளதால் அவர்களுடைய கோவமும் தணிந்துள்ளது.