பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பாடல் நிகழ்ச்சியின் மூலம் சிறந்த பாடகியாக ரசிகர்களால் அறியப்பட்டவர் ராக் ஸ்டார் ரமணியம்மாள். 

திறமையை தடைப்போட்டு நிறுத்த முடியாது என்பதற்கு மிபெரிய உதாரணமாய் இருந்து வருகிறார் . தற்போது இவருக்கு தமிழ் நாட்டில் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 

இவர் முதல் முதல் பாடிய 'காண கருங்குயிலே' பாடலுக்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் இவரை பற்றி ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால்  இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே வெள்ளித்திரையில் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளாராம் .

ஆம், ரமணியம்மாள் 'தெனாவட்டு', 'காதல்' ஆகிய படங்களில் பாடியுள்ளாராம், அதுமட்டுமின்றி விஜய் ஆண்டனி படத்திலும் ஒரு சில பாடல்கள் பாடியுள்ளாராம்.

இந்த தகவலை அவரே சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் தற்போது நடிகர் விஜய்சேதுபதி, நடித்து வரும் ஜுங்கா பாடத்திலும் ஒரு பாடல் பாடியுள்ளாராம்.  இந்த பாடல் வெளிவந்த பின் ரமணியம்மாவின் புகழ் பல மடங்கு உயரும் என கூறப்படுகிறது.