Rocket fans in the theater celebrate Salman Khan film

பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள ட்யூப் லைட் திரைப்படத்தை பார்க்க ஆவலோடு வந்த ரசிகர்கள் தியேட்டரில் ராக்கெட் விட்டு கொண்டாடினர்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக கபீர் கான் - சல்மான் கான் கூட்டணியில், போர் வரலாற்றுப் பின்னணியில் உருவாகிய திரைப்படம் 'டியூப் லைட்'.

இந்தியா – சீனா இடையே போர் நடக்கும் காலத்தில் நடக்கும் கதையாக படம் நகரும்.

இப்படம் கடந்த 1962-ஆம் ஆண்டு நடந்த சீனா - இந்தியா போரில் பங்கேற்க சல்மானின் தம்பி ராணுவத்தில் சேருவார். மூளை வளர்ச்சிக் குன்றியவரான சல்மான் கானுக்கு ராணுவத்தில் இடம் கிடைக்காது. தம்பியைப் பிரிந்து வாடுவார் சல்மான்.

சீனர்களுடன் நட்புடன் இருந்தால் போர் நின்று உனது தம்பி திரும்பி வருவான் என்று சல்மான் கானிடம் கூற, அவரது ஊருக்கு வரும் சீனப் பெண்ணுடன் நட்பு பாராட்டுவார்.

பின்னர், போர் முடிந்ததா? தம்பி உயிருடன் வந்தாரா? என்று உணர்ச்சி, ரொமான்ஸ், போர் உள்ளிட்ட அமைத்து சுவாரஸ்ய அம்சங்களும் இடம்பெறும்.

இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் தியேட்டர் ஒன்றில் இப்படத்தைப் பார்வையிட்ட ரசிகர்கள் சிலர் படத்தில் சல்மான் கானின் முதல் தோற்றத்தின்போது ராக்கெட் வெடிகளை வெடித்தனர்.

தியேட்டருக்குள்ளேயே பட்டாசு வெடித்ததால் பலரும் அலறிக் கொண்டு வெளியே ஓடினர். அவர்கள் தியேட்டருக்குள் ராக்கெட் விடும் காட்சி வீடியோவாகப் பகிரப்பட்டும் வருகிறது.