இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கப்போகும் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

 

அஜித் ஜோடி:

ஏற்க்கனவே இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என கூறப்பட்ட நிலையில். தற்போது தம்பி ராமைய்யா, யோகி பாபு, ரோபோ ஷன்கர் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

 

50 நாள்:

இந்த படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கும் ரோபோ ஷங்கர் அஜித்துடன் படம் முழுக்க பயணிக்கும் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

இதற்காக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரோபோ ஷங்கர்.  இந்த 50 நாட்களும் அஜித் வரும் அனைத்து காட்சிகளிலும் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.