அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின்  டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.

"பிகில்" படத்திற்கு முன்பை விட, இப்போது சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டீவாக இருந்து வரும் இந்திரஜா போட்டோ ஷூட்  ஒன்றில் பங்கேற்றுள்ளார். செம்ம மாடர்ன் லுக்கில்  இந்திரஜா வெளியிட்ட புகைப்படங்கள் சமீபத்தில் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகியது.

இதை தொடர்ந்து தற்போது டிரெடிஷனல் லுக்கில், சேலை கட்டி எடுத்த போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மாடர்ன் லுக்கை விட, இதில் அவரின் அழகு மேலும் கூடி உள்ளது என்றுதான் கூற வேண்டும்.

அளவான மேக்கப், எடுப்பான சேலை, நெற்றியின் நடுவே அழகாய் ஒரு பொட்டு என கியூட் லுக்கில் இருக்கிறார். இதை பார்ப்பவர்கள் அனைவரும் "பிகில்" பாண்டியம்மாளா? இது அசந்து போய் பார்க்கிறார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

அந்த புகைப்படம் இதோ...
 

View this post on Instagram

Thank you for the tremendous response for the first look, the second look is traditional. I hope all of you give the same response and support like the first look. Elegance is beauty that never fades. Thank you again @njsatz Anna for making me look graceful and elegant. I believe there is beauty in simplicity just like in this picture. I thank the entire team who worked on the shoot for such beautiful outfits and another new look. Saree @studio_21__ Blouse @studio_21__ Stylist ,Concept & directing @njsatz Photography @avantikaa__m Makeup & Hair @radhiradhikha Jewelry @gunajewels Studio @sathyanjfashionhouse @njstudios_7159 Footwear @taasooofficial Stylist team @mala_ramprakash @bubbly_candie @its_me_ami_jp

A post shared by Indraja_sankar (@indraja_sankar) on Feb 26, 2020 at 12:08am PST