robo shanker complaint in commisner office

பிரபல தொலைக்காட்சி நடத்திய 'கலக்க போவது யாரு' என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானவர் காமெடி நடிகர் ரோபோ ஷங்கர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது பல முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். இவருடைய காமெடியில் தனி தன்மை இருப்பதால் இவருக்கு மிக பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் இவர் இன்னும் சற்று நேரத்தில் சென்னை கமிஷ்னர் அலுவலகம் சென்று, அவர் மீது சமூக வலைத்தளங்களில் தவறாக செய்திகள் பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பரபரப்பு புகார் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.