பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டுவரும் விஸ்வாசம் படம் வெளி வந்த நாளில் இருந்தே அஜித்தின் ரசிகர்களையும், பேமிலி ஆடியன்ஸையும் ரசிக்க வைத்துள்ளது. அதிலும்  குறிப்பாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள், பெண் பிள்ளைகளை பெற்ற அப்பாக்கள் என அனைவரையும் ரசிக்கும் அளவிற்கு மெகா ஹிட் அடித்துள்ளது. இந்த படத்தில் அஜீத்தின் பங்காளியாக வந்து “மெரட்டு” என்கிற பாத்திரத்தில் பட்டையைக் கிளப்பிய ரோபோ ஷங்கர்  தல அஜித்தைப் பற்றி எக்கச்சக்கமாக புகழ்ந்துள்ளார்.

தல அஜித்தை  முதல் முறையாக படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் சந்தித்தேன். என்னையும், என்னுடைய குடுமத்தைப் பற்றியும்  நிறைய பேசினார். நான் ஒரு ரசிகனாக அவர் ஒரு வருடத்தில் இரண்டு படமாகவது நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டேன். புன்னகையோடு ஆமோதித்தார் நம்ம தல. நான் விஸ்வாசம் ரிலீஸ் ஆன அன்று மதுரையில் இருந்தேன். பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் முன்பே வந்ததை போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

என்ன ஒரு கொண்டாட்டம், என்ன ஒரு உற்சாகம், இந்த பிரமாண்ட வெற்றிக்கு காரணமான அஜித் சார் எந்த சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பது, அவர் மேல் இருந்த மரியாதையை கூடுகிறது.  இனி நானும் அந்த எளிமையை  கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறேன். நான் அவருடன் இனி எத்தனை படங்கள் நடித்தாலும் எனக்கு ஒரு ரசிகனின் மன நிலை மாறாது. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சிவாவுக்கு நன்றி என்கிறார் தூக்கு துரையின் பங்காளி "மெரட்டு" ரோபோ ஷங்கர்.