சமீபத்தில் வெளியாகி தொடர்ந்து பல கோடி ரூபாய் வசூலித்து வரும் திரைப்படம் 'அவென்ஜர்ஸ் எண்டு கேம்'. இந்த படத்தில் நடித்ததற்கு தான் நடிகர் ராபர்ட் டௌனி ரூ.540 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

அவென்ஜர்ஸ் படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் மிகவும் கவர்ந்தவர், அயன் மேன் கேரக்டரின் (டோனியாக) நடித்திருந்த நடிகர் ராபர்ட் டௌனி. இவருக்கு என ஹாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

எண்டு கேம் படத்தில், இவர் இறந்ததற்காக பலர் திரையரங்கிலேயே தேம்பி தேம்பி அழுதனர். சீனாவை சேர்ந்த பெண் அயன் மேன் இறந்ததை தாங்க முடியாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் உடல் நிலை சீரியஸாகி மருத்துவமயில் அனுபாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சைக்கு பின் மீண்டார்.

இவர் தான், அவென்ஜர்சின் கடைசி பாகமாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிக்க ரூ.540 சம்பளமாக பெற்று ஒட்டு மொத்த நடிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.  இந்த தகவல் வெளியானது முதல் ஹாலிவுட் முழுக்க இவருடைய சம்பளத்தை பற்றி தான் பலர் கிசுகிசுத்து வருகிறார்களாம்.