புலன் விசாரணை படம் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. செல்வமணி. நடிகை ரோஜாவின் கணவரும் இவர்தான் என்பது அனைவரும் அறிந்ததே.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது இவர் மீது குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. ஆர்.கே. செல்வமணி படப்பிடிப்பு என்ற நோக்கம் காட்டி விசா எடுத்து பலரை முறைகேடாக லண்டனுக்கு அனுப்பியுள்ளார் என்று உதவி இயக்குனர் கார்த்திகேயன் குற்றம் சாற்றியுள்ளார்.

இதுபோக இங்கிலாந்து அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி ஆர்.கே. செல்வமணி என்றும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

இது பற்றி செல்வமணி வாய் திறந்தாள் மட்டுமே கார்த்திகேயன் கூறுவது உண்மையா அல்லது பொய்யா என்று தெரியவரும்.