RK The city was captured by Sri Teenandal Films ...

வெங்கட்பிரபு தயாரிப்பில் உருவான ஆர்.கே. நகர் படத்தின் வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கி கைப்பற்றியுள்ளது.

வெங்கட் பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் சரவண ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆர்.கே.நகர்’.

அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் வைபவ் ஹீரோவாகவும், சனா அல்தாப் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.

மேலும், இனிகோ பிரபாகர், சம்பத் ராஜ், அஞ்சனா கீர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படத்தின் எதிர்ப்பார்ப்பும் கூடியுள்ள நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்வது கூடுதல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.