சின்னத்திரையில் இருந்து நடிகர், நடிகைகள் வெள்ளித்திரைக்கு வருவது அதிகரித்துக்கொண்டே போகிறது. இப்படி சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருப்பவர்களில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவரை தொடர்ந்து இதே தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான பலர் வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக மாறினாலும் அவர்களால் நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை.

ஆனால் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சீரியல் மூலம் பிரபலமான, நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு சீரியல் நடிகை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வர உள்ளார்.

அவர் வேறு யாரும் இல்லை, கடந்த ஆண்டு தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக, தெரிவித்த சீரியல் நடிகை திவ்யா கணேஷ் தான். 

இவர்களுடைய திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக நின்று போனது. இதைத்தொடர்ந்து இவர் சீரியல்களில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார். 

இந்நிலையில் தற்போது இவர்  ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். மோகன்லால் அண்ணன் மகன் நாயகனாக நடிக்கும் படம் தான் அது.

தமிழ் பெண்ணான இவர் தெலுங்கிலும் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறாராம். அதே போல் தமிழில் இவரை  ஹீரோயினாக நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. 

திருமணத்திற்கு பின் இவர் நடிக்க மாட்டார் என ஏற்கனவே கூறி இருந்த நிலையில், திருமணம் நின்றதால் கதாநாயகியாக மாறும் அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.