Asianet News TamilAsianet News Tamil

அஜித் டாட்டூ வரைந்து..... ரசிகர் மன்ற தலைவனான..... தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷ்....!!!  

rk suresh-acting-the-ajith-fan-role
Author
First Published Dec 27, 2016, 3:43 PM IST


'தாரை தப்பட்டை' மற்றும் 'மருது'  படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர்  பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ்.

இவர் தற்போது ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று 'பில்லா பாண்டி என்கிற படம் .

இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ் அஜித் ரசிகர் மன்ற தலைவராக நடிக்கவுள்ளாராம்.

இதற்காக அவர் உண்மையான அஜித் ரசிகர் மன்ற தலைவர்களை சந்தித்து தனது கேரக்டருக்கு மெருகேற்ற முடிவு செய்துள்ளார். 

மேலும் அஜித்தின் உருவத்தை தனது உடம்பில் டாட்டூவாகவும்  வரைய உள்ளாராம்.

இதுகுறித்து ஆர்.கே.சுரேஷ் கூறியபோது, ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் தனக்கு 20 ஆண்டு கால நண்பர் என்றும் அதன் மூலம் அஜித் தனக்கு நன்கு அறிமுகமானவர் என்று  கூறியுள்ளார். 

இதன் காரணமாகவே அஜித் ரசிகராக இந்த படத்தில் நடிக்க தான் ஒப்புக்கொண்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 14 முதல் தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர்.

இது முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி படமாக உருவாகவுள்ள படம் என்றும், இதற்காக  அஜித் ரசிகர்கள் உள்பட அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும் ஆர்.கே.சுரேஷ் மேலும் கூறியுள்ளார்

Follow Us:
Download App:
  • android
  • ios