சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கோரதாண்டவம் ஆடி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 லட்சத்தை கடந்துள்ளது. இதில் சுமார் 4 லட்சத்து 79 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 50 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

திரைத்துறையைப் பொறுத்தவரை ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல பிரபலங்களும் இந்த கொடூர வைரஸால் திடீரென உயிரிழப்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும் அச்சத்தில் உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகரான ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

ரேடியோ ஆர்.ஜே.வாக தனது பயணத்தை ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. காமெடி நடிகராக வலம் வந்த ஆர்.ஜே.பாலாஜி, ஹீரோவாக நடித்த எல்.கே.ஜி திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாஸ் ஹிட்டடித்தது. தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி முடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜி, அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நயன் முதன் முறையாக அம்மன் கெட்டப்பில் நடித்துள்ளதால் மூக்குத்தி அம்மன் பட ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

 

இதையும் படிங்க: நடிகை சமந்தாவுக்கு கொரோனாவா? ... கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த தோழிக்கு தொற்று உறுதியானதால் அதிர்ச்சி...!

இந்நிலையில் ஆர்.ஜே.பாலாஜியின் அம்மாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாராம். இந்த செய்தி திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆர்.ஜே.பாலாஜிக்கு எல்லாமே அவருடைய அம்மா தான். ரசிகர்களை ஈர்க்கும் அந்த பேச்சு கூட அம்மாவிடம் இருந்து வந்ததாக ஆர்.ஜே.பாலாஜி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.