சமீபகாலமாக எப்.எம்-யில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள் பலர்,  சின்னத்திரை, மற்றும் வெள்ளித்திரையில் அதிக அளவில் கலக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆர்.ஜே பாலாஜி, மிர்ச்சி சிவா, மிர்ச்சி செந்தில் என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.  தற்போது ரேடியோ மிர்ச்சியில் பல வருடங்களாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ஆர்.ஜே விஜய்,  இப்போது கலர்ஸ் தமிழ் டிவியில் "டான்ஸ் vs  டான்ஸ்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவருக்கு தான் தற்போது திருமண வேலைகள் களைகட்டி வருகிறது. இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஐடி துறையில் பணியாற்றும் மதுரையை சேர்ந்த மோனிகா என்கிற பெண்ணை காதலித்து வருவதாகவும் தற்போது இருவர் வீட்டிலும் இவர்கள் திருமணத்திற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டதால்,  திருமண வேலைகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

மேலும் இவர்களுடைய திருமணம் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் இவர்களுடைய திருமணத்தில் நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது.