rj vaishnawari teach how to clean toilet

பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துக்கொண்ட பிரபலங்கள் அனைவரையும் யாராலும் எளிதில் மறந்து விட முடியாது. அதிலும் நடிகை நமீதா போட்டியாளர்கள் அனைவரையும் அழைத்து சென்று, எப்படி டாய்லெட் சுத்தம் செய்வது என்று கற்றுக்கொடுத்தது ஹை லைட். அனைவரிடமும் பாராட்டைப் பெற்ற செயலாக அமைந்தது. 

நடிகர் கமல்ஹாசன் கூட நடிகை நமீதாவின் இந்த செயலுக்கு அவரை வெகுவாகப் பாராட்டினார். 

இந்நிலையில் அவரை தொடர்ந்து, இரண்டாவது சீசனின் கலந்துக்கொண்டுள்ள, ஆர்.ஜே.வைஷ்ணவி நமீதாவை போலவே அனைத்து போட்டியாளர்கள் இடையே டாய்லெட் சுத்தம் குறித்து பேசியுள்ளார்.

நேற்றைய தினம் போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த வைஷ்ணவி, அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைத்தார். "அது டாய்லெட் பயன்படுத்தினால், மேலே தண்ணீர் ஊற்றி விட்டு அப்படியே வரவேண்டாம். தயவு செய்து மேலே ஊற்றிய தண்ணீரை டிஷ்யு வைத்து துடைத்து விட்டு வாருங்கள். அது தான் உகர்ந்தது என்றும் , இல்லை என்றால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறினார். 

இவரின் இந்த செயல் நமீதாவை நினைவு படுத்துவதாக சமூக வலைத்தளத்தில் பலர் கருத்து தெரிவித்து வந்தாலும். அடிப்படை விஷயத்தை இவர் சொல்லி கொடுத்ததற்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.