Veetla Vishesham : விக்ரம் படம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வீட்ல விசேஷம் படம் கோடிக்கணக்கில் வசூலித்து வருவது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் பதாய் ஹோ. இப்படம் தற்போது வீட்ல விசேஷம் என்கிற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி உள்ளது. இப்படத்தை பிரபல நகைச்சுவை நடிகரும், கிரிக்கெட் வர்ணனனையாளருமான ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தில் நடிகை ஊர்வசி, சத்யராஜ், லலிதா என அனுபமிக்க நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளார். இப்படத்தை வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை கதையம்சம் கொண்ட இப்படம் கடந்த ஜூன் 17-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

வெளியானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. குறிப்பாக பேமிலி ஆடியன்ஸுக்கு இப்படம் மிகவும் பிடித்துப்போனதால் வார நாட்களில் கூட வசூலை வாரிக் குவித்து வருகிறது.

இந்நிலையில் வீட்ல விசேஷம் படத்தின் 4 நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நான்கு நாட்களில் 6.5 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மறுபுறம் விக்ரம் படம் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இப்படம் கோடிக்கணக்கில் வசூலித்து வருவது திரையுலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... Prince Release date : தீபாவளி ரேஸில் இணைந்த சிவகார்த்திகேயன்... பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்