நடிகர் ஆர்.ஜெ.பாலாஜி ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடியவர்களில் ஒருவர், மேலும் போராட்டம் நடைபெற்ற பல மாவட்டங்களுக்கும் சென்று இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அணைத்து இளைஞர்களையும் உற்சாக படுத்தும் வகையில் பேசினார்.

மேலும் தற்போது வாட்ஸ் ஆப் மூலம் இப்போது நடந்து வரும் கலவரம் பற்றி கருது கூறியுள்ளார்.

இந்த போராட்டம் மற்ற நாடுகளே வியர்த்து பார்க்கும் வகையும் அமைதியாக அறவழி போராட்டமாக நடத்தி வந்த மாணவர்கள் ஏன் இப்போது இப்படி ஒரு கலவரத்தில் இறங்கியுள்ளனர் என தெரியவில்லை என்றும்.

மேலும் இந்த போராட்டம் நடத்த பட்ட நோக்கம்ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பது தான்தற்போது நாம் நடத்தி வந்த போராட்டத்திற்கு பலன் கிடைத்து விட்டது. மேலும் ஏன் மிக மோசமான செயல்களில் ஈடுபட வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

அதே போல இத்தனை நாட்கள் நமக்கு உறுதுணையாக இருந்த காவலர்கள் பல விதத்திலும் நமக்கு உதவி செய்தனர் பாதுகாப்பு கொடுத்தனர் ஆனால் இப்போது

அவர்களை தாக்குபவர்கள் மாணவர்களா...??? அல்லது வேறு யாராவது இப்படி செய்கின்றனரா என தெரியவில்லை என கூறினார்.

மேலும் நமக்கு கிடைத்த இந்த வெற்றியை சந்தோஷமாக கொண்டாட வேண்டும்எனவே இப்போது போராட்டத்தை தற்போது அனைத்து இளைஞர்கள்மாணவர்கள்பெண்கள் என அனைவரும் விட்டு விட்டு தயவு செய்து வீடு திரும்புங்கள் என கூறியுள்ளார்.