தேசிய கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரிரங்கன் குழுவினர் இந்தி மொழி பேசாத மாநிலங்களில்,  இந்தியை பயிற்றுவிக்கலாம் என்கிற பரிந்துரையை கொடுத்தனர்.  இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து தற்போது பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, LKG படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டு அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி ரங்கன் குழு,  இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அளித்துள்ள பரிந்துரையில், மும்மொழி கொள்கையை கட்டாயமாக்க வேண்டும்.  இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழி, மற்றும் ஆங்கிலம் தவிர, இந்தி மொழியை பயிற்றுவிக்கலாம் என்று பரிந்துரை செய்தது.

இதற்க்கு அரசியல் வாதிகள் முதல், தமிழக மக்கள் வரை ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறி, தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி 'LKG ' படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் பதிவிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் ஹிந்தியை எதிர்கவில்லை.  ஹிந்தி மொழி திணிக்கப்படுவது தான் எதிர்க்கப்படுகிறது. பல மொழிகள் அறிவது பலம். ஆனால் அதை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும். திணிக்க கூடாது என கூறியுள்ளார்.