பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து, எளிதில் யாராலும் புரிந்து கொள்ள முடியாத நபராக இருந்தவர் நடிகை ரித்விகா தான். இவர் பிக்பாஸ் வீட்டின் உள்ளே வர காரணம் நடிகர் சூர்யா என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார் ரித்விகா.

இதில்... தனக்கு பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு விளையாட அழைப்பு வந்ததாகவும், ஆனால் அப்போது தனக்கு படப்பிடிப்புகள் இருந்ததால், என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் இரண்டாவது சீசன் துவங்குவதை அறிந்து நானே போன் செய்து கேட்டேன் என பதில் கொடுத்துள்ளார்.

தவறு செய்து விட்டேன்:

தற்போது நான் செய்த தவறுகள் தனக்கு தெரிவதாகவும், பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்து நான் பெரிதாக யாருடனும் பழகாமல் இருந்து விட்டு எட்டு வாரங்களுக்கு பின்பு தான் அனைவருடனும் பேசி பழக துவங்கியதாகவும். இதானால் பலருடன் நன்றாக பேசி பழகும் வாய்ப்பை இழந்து தவறு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  

அதே போல்... பாலாஜி மீது குப்பை கொட்டும் போது அதனை நான்   தடுக்காமல் இருந்தது மிகப்பெரிய தவறு என்றும், அத்தருணத்தில் பாலாஜி அண்ணா தன்னுடன் மிக நன்றாக பேசிக் கொண்டிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். 

தன்னுடைய, வாழ்வில் கிடைத்த முழுமையான வெற்றியே இதுதான். 
பிக்பாஸ் வைத்த நேர்காணலில் அதிகமாக பேசியவருக்கே முன்னிலை இருந்ததாகவும், நாம் மிக அமைதியாக இருந்ததால் கடைசி போட்டியாராகவே உள்ளே சென்றதாகவும், செல்லும் முன்பு நீங்கள் எப்படியிருப்பீர்களோ அப்படியே இருங்க அதுதான் வேண்டும் என பிக்பாஸ் கூறியே உள்ளே அனுப்பிதாகவும் தெரிவித்துள்ளார்.