மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான, ஜே.கே.ரித்தீஷின் உடல் இன்று மாலை அவருடைய சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இவருடைய உடலுக்கு திரையுலகை சேர்ந்த நடிகர்களும், அரசியல் பிரபலங்களும், அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர்களுடைய உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலங்கி அழும் காட்சிகள் அனைவருடைய மனதையும் உலுக்கும் விதமாக இருந்துள்ளது.

நடிகர் சின்னி ஜெயந்த் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, நாயகன் எல்.கே.ஜி, என குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமானவர் நடிகர் ரித்தீஷ்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'எல்.கே.ஜி' திரைப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில், ராமநாதபுரத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து, ஜே.கே.ரித்தீஷ் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்திற்கு பின் மாலை உணவு அருந்திய பின்னர்  தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார்.  எடுத்து வருவதற்குள் மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக வீட்டில் இருந்த உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு இதயத்துடிப்பு உள்ளதாகக் கூறி, மற்றொரு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போதும் மருத்துவர்கள் ரித்தீஷ் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

இதைத் தொடர்ந்து இந்த செய்தி சென்னையில் உள்ள ரிதீஷின் மனைவிக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக அவர்  சொந்த ஊரான இராமநாதபுரத்திற்கு விரைந்தார். ரித்தீஷுக்கு ஹிருத்திக் ரோஷன், ஹரிக்கு ரோஷன், என்கிற இரண்டு மகன்களும்,  தானவி என்கிற ஆறு மாத பெண் குழந்தையும் உள்ளது.

குடும்பத்தினர் தானவி மீது ரித்திக் தன்னுடைய உயிரையே வைத்திருந்ததாக கூறு கதறி அழுத்த காட்சிகள், அங்கிருந்த அனைவரின் மனதையும் உலுக்கும் விதமாக இருந்தது. பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ரித்தீஷின் உடல், இன்று மாலை 5 மணி அளவில் சொந்த ஊரான மணக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.